வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எவ்வளவு பணம் எடுத்துச்செல்லலாம் தெரியுமா?
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நமது கையில் எவ்வளவு பணத்தைக் கொண்டு செல்லலாம் எனும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நமது கையில் எவ்வளவு பணத்தைக் கொண்டு செல்லலாம் எனும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.
சிங்கப்பூருக்குள் ஒருவர் 20,000 வெள்ளி வரை எடுத்துவரலாம் அல்லது 20,000 வெள்ளி வரையிலான தொகையை எடுத்துச் செல்லலாம். அதற்கு அதிகமான தொகை கையிலிருந்தால் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.
சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தகவல்கள் உள்ளன.
மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்? அங்கிருந்து திரும்பும்போது எவ்வளவு தொகை வரை எடுத்துவரலாம்? என்பதை பார்க்கலாம்.
- மலேசியா : அதிகபட்சம் US$10,000
- தாய்லந்து : அதிகபட்சம் US$20,000
- பிலிப்பீன்ஸ் : அதிகபட்சம் US$10,000
- இந்தியா : அதிகபட்சம் US$10,000 (ரொக்கம் US$5,000 தாண்டினால் அதனைக் குறிப்பிடவேண்டும்)
- இலங்கை: அதிகபட்சம் US$10,000
- கம்போடியா : அதிகபட்சம் US$10,000
- அமெரிக்கா : அதிகபட்சம் US$10,000
- பிரிட்டன்: அதிகபட்சம் £10,000
கையில் உள்ள ரொக்கம் அனுமதிகப்பட்ட தொகைக்கு அதிகமாக இருந்தால் நாம் செல்லும் நாடு அல்லது புறப்படும் நாட்டின் சுங்கத்துறையிடம் தெரியப்படுத்தவேண்டும். மேலதிக விவரங்களுக்கு நாம் செல்லும் நாடுகளின் தூதரகம் அல்லது சுங்கத்துறை இணையப்பக்கத்தை பார்வையிடலாம்.