8 மாவட்டங்களுக்கு அதிக மழை அபாய எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, நாட்டின் சில பகுதியில் நிலவும் மழை நிலைமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, நாட்டின் சில பகுதியில் நிலவும் மழை நிலைமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மாகாணங்களில் சில இடங்கள் மற்றும் மற்றும் கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.