வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை
மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலங்கையின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், குறிப்பாக வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் வரவிருக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய 15 மாவட்டங்களில் மாத்திரமே இந்த எச்சரிக்கை நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெப்ப அதிகரிப்பானது, உடல்நல தீங்குகளை ஏற்படுத்துவதோடு வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்கள் அதிகளவு பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
எனவே, மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன், வெயிலின் போது குளிர்ச்சியாக இருக்க மக்கள் இலகுரக, தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கடுமையான உழைப்பைக் குறைக்கவும், முடிந்தவரை நிழலைத் தேடவும் மற்றும் போதுமான அளவு நீரேற்றத்துடன் இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.