தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும்.

2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை திகதி தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை, அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.