IT செயலிழப்பு; GPS, விமான நிலையங்கள், வங்கிகள் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பத்தில் (information technology) திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதால் பல நாடுகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, இங்கிலாந்தில் GPS தொடர்பு, விமான நிலையங்கள் மற்றும் வங்கிகள் முடங்கியுள்ளன.
விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு, பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
இந்த இடையூறு இங்கிலாந்து விமான நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வழிவகுத்தது. அத்துடன், சில தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பப்படவில்லை. லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவுகளை உள்ளடக்கிய அவர்களின் பதிவு அமைப்புகளை அணுகுவதற்கு GPக்கள் சிரமப்படுகின்றனர். மருந்துச் சீட்டுகளுக்கான அணுகல் போன்ற மருந்தகச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இணைய பாதுகாப்பு நிறுவனமான Crowdstrike, உலகளாவிய IT சிக்கல்கள் உள்ளடக்க புதுப்பித்தலில் உள்ள குறைபாட்டால் ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு சம்பவம் அல்லது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.
அதேவேளை, இந்த நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.