பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது.

தற்போதைய கணிப்பின்படி, இன்று சில பகுதிகளில் 60 முதல் 80 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, Met Office சில மாவட்டங்களுக்கு “அம்பர்” (Amber) எச்சரிக்கை விடுத்து, வெள்ள ஆபத்து குறித்து மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடலோரப் பகுதிகளில் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.