9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்ய ஈராக் அனுமதி - வலுக்கும் கண்டனம்
ஈராக்கில் 9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி அளிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு தாக்கல் செய்துள்ளது.

ஈராக்கில் 9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி அளிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு தாக்கல் செய்துள்ளது.
தற்போது ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது.
பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கெனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.
தற்போது ஈராக் அரசாங்கமே பெண்களின் திருமண வயது 9 என அறிவித்ததால் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.