97 பொருட்களுக்கு வற் வரி விதிப்பு... இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கே வரி விதிக்கப்படவுள்ளது.

டிசம்பர் 9, 2023 - 14:58
97 பொருட்களுக்கு வற் வரி விதிப்பு... இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி

138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு வற் வரி விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கே வரி விதிக்கப்படவுள்ளது.

சபை ஒத்திவைப்பு வேளையில் நேற்று பாராளுமன்றில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வற் வரஜ விலக்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வரி விலக்கை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வற் வரி விதிக்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீத வருமான அதிகரிப்பு அதாவது 378 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!