சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை

சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(22) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று, இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சாலமன் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகினா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா்.