டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள கோல்ப் கிளப்பில் கோல்ப் விளையாடிய நிலையில், திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முன்னதாக, பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது.
இந்த நிலையில் டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள கோல்ப் கிளப்பில் கோல்ப் விளையாடிய நிலையில், திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், இந்த விவகாரத்தில் வேறு எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.