மலேசியாவில் இலங்கையர்கள் விளக்கமறியல் நீட்டிப்பு
மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி அந்நாட்டு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில், பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சந்தேக நபர்களின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது.