பாம்பை கொத்தி விழுங்கும் கொக்கு

பாம்பு ஒன்றை கொக்கு கொத்தி விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

செப்டெம்பர் 6, 2023 - 16:11
பாம்பை கொத்தி விழுங்கும் கொக்கு

சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமான பயனர்களை கவர்ந்து விடுகிறது. அதிலும் பாம்புகள் குறித்த வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் பாம்பு ஒன்றை கொக்கு கொத்தி விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புளோரிடாவை தலைமையிடமாக கொண்ட யூடியூப்பர் வெளியிட்ட அந்த வீடியோவில், மீனுக்காக வந்த கொக்கு பாம்பை கொத்தி விழுங்கும் காட்சிகள் பயனர்களை திகைக்க வைத்துள்ளது.

இவ்வாறு பாம்பை வேட்டையாடுவது ப்ளூஹெரான் எனப்படும் நீலக்கொம்பு என்று அழைக்கப்படும் கொக்கு வகையாகும். 

பாம்பின் தலையை நேரடியாக பிடித்து விடும் நீலக்கொம்பு, பாம்பை மெல்ல மெல்ல கொத்தி விழுங்கும் காட்சிகள் பார்வையாளர்களை பதைப்பில் ஆழ்த்தி டிரெண்ட் ஆகி வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!