கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நண்டுகள்
ஆயிரக்கணக்கான சிலந்தி நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.

இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸிலுள்ள அபெர்ஃப்ராவ் பகுதியில் உள்ள கடற்கரையில், ஆயிரக்கணக்கான இறந்த நண்டுகளின் ஓடுகள் கிடப்பதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான சிலந்தி நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பில் அச்சப்பட அவசியம் இல்லை என Anglesey கடல் உயிரியல் பூங்கா அமைப்பின் இயக்குநரான பிரான்கி ஹோப்ரோ தெரிவித்துள்ளார்.
நண்டுகள், இறால் மீன்கள் போன்ற உயிரினங்கள், வளர்ச்சியின் ஒரு பாகமாக தங்கள் உடலின் மேலுள்ள ஓட்டை அகற்றுவது வழமையான விடயம் என அவர் கூறியுள்ளார்.
எனவே, நண்டுகளின் ஓடுகள் கரை ஒதுங்கியுள்ளமையினால் அவை இறந்து விட்டதாக என எண்ணத் தேவையில்லை என்றும், ஆயிரக்கணக்கான நண்டுகள் இனப்பெருக்கம் மேற்கொள்வதை இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.