ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றது சீனா
ஐ.நா. சபையால் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சபையின் தலைமை பதவி சீனா வசம் வந்துள்ளது.

ஐ.நா. சபையால் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சபையின் தலைமை பதவி சீனா வசம் வந்துள்ளது.
1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளதுடன், இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாகும்.
அத்துடன், பாதுகாப்பு சபையின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது. கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.
தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
"தனது கடமையை பாதுகாப்பு சபை செய்ய சீனா ஊக்குவிக்கும். ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) தெரிவித்தார்.