குழந்தை பெற்ற மருமகளைப் வீட்டுக்கு பாரந்தூக்கியில் அழைத்துச் சென்ற மாமியார்
South China Morning Post அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்ற பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்செல்ல பாரந்தூக்கிக்கு ஏற்பாடு செய்த அவரின் மாமியார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
South China Morning Post அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
மகனின் வீடு 7ஆம் மாடியில் உள்ள நிலையில், கட்டடத்தில் மின்தூக்கி இல்லையென்பதால் மருமகள் படிக்கட்டில் ஏறச் சிரமப்படுவார் என்று அவரது மாமியாரான வாங் அஞ்சியுள்ளார் .
பின்னர், அவர் தமது மகனிடம் பாரந்தூக்கிகளை வைத்திருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும்படிக் கூறினார்.
Douyin தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் மருமகள் பாரந்தூக்கியில் அவரின் வீட்டு மாடத்தில் இறங்கும் காட்சி உள்ளது.
15 ஆண்டுகளில் இத்தகைய அழைப்பு கிடைத்தது இதுவே முதல் முறை என்று பாரந்தூக்கி நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.