சீரற்ற காலநிலை : கனடாவில் பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை
பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.