பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவதுடன், கார் உரிய இடத்தைச் சென்றடைவதற்குள் குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றது.
நேற்று (மே18 ) இடம்பெற்ற இந்த வெடிப்பில் உயிரிழந்த நால்வரும் பொதுமக்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.