அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு
வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.

வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கை கழுகுகள் அலாஸ்கா, கனடா, வடக்கு மெக்சிகோவில் அதிகம் வசிக்கின்றன.
இவை வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. அமெரிக்க ஆவண காப்பகத்தின்படி 1782ம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரசிடம் வழுக்கை கழுகு பறவையை அமெரிக்காவின் தேசிய பறவையாக பயன்படுத்த வரைதல் மசோதா தரப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர் ஆலிவ் கிளைகள் மற்றும் அம்புகள் ஆகியவை வழுக்கை கழுகின் கூர்மையான கொக்கி நகங்களில் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து அதேஆண்டு வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து உத்தியோகப்பூர்வ ஆவணங்கள், நாணயம், கொடிகள், ராணுவ சின்னம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புடைய பொருள்களில் இடம்பெற்றுள்ளதை காண முடியும்.
இந்நிலையில் 240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக உள்ள வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். வழுக்கை கழுகு வெண்தலை கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.