மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி... புதைந்திருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்!

இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து மாயமானவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

பெப்ரவரி 13, 2024 - 00:19
மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி... புதைந்திருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்க சுரங்கம் அமைந்துள்ள கிராமத்தில் பெய்தன கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி, புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பிலிப்பைன்ஸ் தென்கிழக்காசியாவில் உள்ள மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு நாடாகும். தெற்கு பிலிப்பைன்ஸின் தாவோ டி ஓரோ மாகாணத்தில் மசரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தங்கச்சுரங்கள் உள்ளது. அந்த சுரங்கத்தில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மசரா கிராமத்தை சுற்றிய மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மசரா கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அச்சமயம் தங்கச்சுரங்க ஊழியர்கள் பணியை முடித்து வீடு திரும்ப 2 பேருந்துகளில் காத்திருந்தனர்.

ரன் அவுட்டை இல்லை என்று அறிவித்த நடுவர்; கிரிக்கெட்டில் அதிர்ச்சி!

இந்த நிலச்சரிவில் தங்கச்சுரங்க ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை உயிருடன் மீட்டனர். 

ஆனால், இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து மாயமானவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அச்சம் ஆகியவற்றால் தேடுதல் பணி தடைப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறும்போது 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவர்களின் பாதுகாப்பிற்காக வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர். 

அத்துடன் சமீபத்திய மாதங்களில் நிலநடுக்கங்களால் இப்பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மீட்புப் பணியாளர்கள் சிறுமியை அவசர போர்வையில் போர்த்தி, ஆக்ஸிஜன் தொட்டியில் இணைத்து, அருகிலுள்ள மாவாப் நகராட்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. 

மண்ணுக்குள் புதைந்தவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!