கொழும்பு யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுன் 27, 2023 - 14:45
கொழும்பு யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
படம் - வைப்பகம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மூடப்படும் பாடசாலைகள்!  வெளியான தகவல்!

படம் - வைப்பகம்

 காலி முகத்திடலில் உள்ள யாசகர்களால் உள்ளுர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

காலி முகத்திடலில் கூடும் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் ஆகியோருக்கு யாசகர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், அங்கு சுமார் 150 யாசகர்கள்  உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இவர்களை இடமாற்ற வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!