கொழும்பில் ஆட்டோவுக்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்
உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, வோர்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்ட பொலிஸாருக்கு 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் வினவியபோது, முச்சக்கரவண்டி தனது மைத்துனரான 33 வயதுடைய நபருக்கு வாடகைக்கு ஓட்டுவதற்காக வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.