பொது மன்னிப்பின் கீழ் 779 கைதிகள் விடுதலை
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.
பொது மன்னிப்புக்கு தகுதியான 768 ஆண் கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் குறித்த கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளின் உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்க முடியும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.