ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்: பலர் கைது.. மூவர் வைத்தியசாலையில்!
சம்பாவிதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று (9) இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அசம்பாவிதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இலவசமாக இசை நிகழ்வை கண்டுகளித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்த, கட்டணம் செலுத்தி இசை நிகழ்வை பார்த்துகொண்டிருந்த பகுதிக்குள் நுழைந்ததுடன், மேடைக்கும் செல்ல முற்பட்டுள்ளனர்.
அத்துடன், கமெரா மற்றும் ஒலி அமைப்பு பொருத்தப்பட்டிருந்த மேடைகள், பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி ஆராவராத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, இசை நிகழ்வு சில மணிநேரங்கள் இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார், விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேலதிகமாக மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர், இசை நிகழ்வு மீள ஆரம்பிக்கப்பட்டு, சில மணிநேரங்களில் அவசர அவசரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.