2024 ஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் (Live)
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியது.
நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 22 பேரும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 17 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.