இஸ்ரேலின் தாக்குதலில் 141 பேர் பலி: 400 பேர் காயம்
இஸ்ரேல்- காசா போர்: இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல்- காசா போர் கடந்த ஒக்டோபர் 7 முதல் நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
அத்துடன், 400 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 88 ஆயிரத்து 800 பேர் காயம் அடைந்து உள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.