ரயிலுடன் மோதி கார் விபத்து: பெண் படுகாயம்
களனிவெளி பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

களனி, செப் 21
களனிவெளி பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை ரயில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே பங்கிரிவத்த ரயில் கடவைக்கு அருகில் காரை மோதியுள்ளது.