பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜுலை 5, 2022 - 15:52
ஜுலை 5, 2022 - 21:53
பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாகவும் எனினும் அது சாத்தியமில்லாத விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும் அந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க விருப்பம் இல்லையென்றால் நாடாளுமன்றத்திலாவது அதனை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும, அனுர குமார திஸாநாயக்கவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், தான் பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கும் தயார் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!