நீரில் மூழ்கி யாழில் உயிரிழந்த கிளிநொச்சி யுவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி யாழில் உயிரிழந்த கிளிநொச்சி யுவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி  நேற்று (20)  உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி (வயது 18) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்த யுவதி, மேலும் நால்வருடன் கடலில் நீராடியுள்ளார். 

பின்னர் கற்கோவளம் பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலும் இறங்கி நீராடியுள்ளனர். 

அதன் போது, குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

எனினும் குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.