இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி?
தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் படுக்கை அறையில் உளவு பார்க்கும் கருவியை வைக்க முயன்ற பாதுகாப்பு ஊழியரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்கூட்டியே இம்ரான் கான் பாதுகாப்பு ஊழியர்களின் பட்டியலை அளித்திருந்தால் அவர்களின் பின்னணியை விசாரித்திருக்க முடியும் என்று இஸ்லாமாபாத் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிர் என்ற பாதுகாப்பு ஊழியர் தம்மை இம்ரான் கானின் பாதுகாவலர்கள் அடித்து சித்ரவதை செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.