ஆடு மேய்த்தவருக்கு குவியும் பாராட்டு

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

டிசம்பர் 21, 2022 - 15:46
டிசம்பர் 21, 2022 - 15:51
ஆடு மேய்த்தவருக்கு குவியும் பாராட்டு

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர், வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை கண்டெடுத்துள்ளார்.

இவ்வாறு கண்டெடுத்த பணத்தை கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்த நிலையில், எவரும் அதற்கு உரிமை கோராத நிலையில் குறித்த பணம்  கிளிநொச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். வீதியில் கிடந்து எடுத்த பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட அவரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!