இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.
80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் கொழும்பில் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு உள்ளிட்ட சொத்துகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
"பொதுமக்களுக்கான முக்கிய செய்தி, பீதி அடைய வேண்டாம். ஆனால், STSS உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்" என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.