இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.
இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.