சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிகளுக்கு திறக்கப்போகும் அதிர்ஷ்டக் கதவுகள்!

ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி 19, 2026 - 06:28
சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிகளுக்கு திறக்கப்போகும் அதிர்ஷ்டக் கதவுகள்!

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்த கர்மத்தின் அடிப்படையில் பலன்களையும், பாடங்களையும் வழங்குபவர் சனி என நம்பப்படுகிறது. அதனால் தான் சனிபகவானின் பெயர்ச்சிகளும், நட்சத்திர மாற்றங்களும் ஜோதிட ரீதியாக பெரும் கவனத்தை பெறுகின்றன.

அந்த வகையில், வரும் ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நன்மைகளை அளிக்கும் காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்திரட்டாதி நட்சத்திரம் ஆன்மீகம், மன உறுதி மற்றும் நிலைத்தன்மையை குறிக்கும் நட்சத்திரமாகும். கர்ம பலன்களை வழங்கும் சனிபகவான் இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், கடந்த காலத்தில் சந்தித்த சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் மீண்டும் வேகம் எடுத்து, வெற்றிப் பாதையில் செல்லத் தொடங்கலாம்.

இந்த நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும். இவர்களின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயர வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை அதிகரித்து, தங்கள் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தும் நிலை உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்; வேலை செய்யும்வர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கும் இந்த காலம் சாதகமாக இருந்து, போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைத் தரும்.

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கலாம். ஆசைப்பட்ட பயணங்கள் நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது. முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைப்பதால், வாழ்க்கைத் தரமும் மன மகிழ்ச்சியும் உயரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைத்து, தங்கள் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெற்று, திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். சொத்து அல்லது வாகனம் வாங்குவது குறித்த எண்ணங்களும் உருவாகலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். புதிய வேலை அல்லது தொழில் வாய்ப்புகள் கிடைப்பதால் வருமானம் உயரும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். நிதிநிலை நிலையாகி, பல வழிகளில் இருந்து லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது; பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது அங்கீகாரம் கிடைக்கலாம். மொத்தத்தில் இந்த காலகட்டம் வெற்றியும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும்.

இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. பலன்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். ஜோதிட ஆலோசனைகள் அல்லது பரிகாரங்களை மேற்கொள்ளும் முன், தகுதியான ஜோதிடரை அணுகுவது நல்லது. இந்த தகவல்கள் வழிகாட்டுதலுக்காக மட்டுமே; தொழில்முறை ஆலோசனைகளுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!