சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று (22) இதனைக் கூறியுள்ளார்.

Nov 23, 2023 - 09:00
Nov 23, 2023 - 09:18
சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி,  வரும் நாட்களில் நவீன தொழில்நுட்பத்துடன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று (22) இதனைக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து சீனியின் விலை அதிகரிப்பு

“மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில் இ - மோட்டாரிங் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகன போக்குவரத்துத்து திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனுமதியை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 10,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதுடன், எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.