177 பவுண் தங்க ஆபரணங்களுடன் 4 பேர் ஹட்டனில் கைது!

சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் திருடிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 1, 2022 - 12:04
177 பவுண் தங்க ஆபரணங்களுடன் 4 பேர் ஹட்டனில் கைது!

சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் திருடிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் நகரில் உள்ள அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி குறித்த தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன. இவற்றின் பெறுமதி 3 கோடியே 54 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, சுமார் 6 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் பெண் ஒருவரும் 3 ஆண்களுமாக 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து தங்கச்சங்கிலிகள், பெண்டன்கள், மோதிரங்கள் உள்ளிட்ட பல ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆபரணங்களுடன் சந்தேக நபர்களை, இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!