நொச்சிக்குளம் வாள்வெட்டு; சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜுன் 13, 2022 - 21:40
நொச்சிக்குளம் வாள்வெட்டு; சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் நொச்சிக்குளத்தில் இரு சகோதரர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணித்த சம்பவம் தொடர்பாக சந்தேக  நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழ (10) நொச்சிக்குளத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை வாள்வெட்டில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த  சம்பவம் தொடர்பில்  நொச்சிக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர்  பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பாக மன்னார் சட்டத்தரணி எம்.ரூபன்ராஜ் பதில் நீதவான் முன்னிலையாகி இருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை பதில் நீதவான் எதிர்வரும் (24) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!