கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கை பகுதியில் இன்று(18) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கை பகுதியில் இன்று(18) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.