தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : வெளியான முக்கிய தகவல்
தங்கத்தின் விலை: தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலைஇன்று (13) சடுதியாக அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 740,645 ரூபாயாக இன்று காணப்படுகின்றது.
அத்துடன், 24 கரட் தங்க கிராமின் விலை 26,130 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 209,050 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,960 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 191,650 ரூபாயாக காணப்படுகின்றது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,870 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் 182,950 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் 197,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அங்கு 22 கரட் தங்கப் பவுண் 185,000 ரூபாயாக காணப்படுகின்றது.