வரி குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு
இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, இன்று (18) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார்.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, இன்று (18) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார்.
இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, Paye tax தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
"நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம்.
வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபாய் வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.
அதன்படி, மாதம் 150,000 ரூபாய் சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
250,000 ரூபாய் சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன், 300,000 ரூபாய் சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அத்துடன், 350,000 ரூபாய் சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.