அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 13, 2024 - 13:53
அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம், வெள்ளை சீனி, செத்தல் மிளகாய் போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்து உள்ளது.

விலை உயர்வை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் அதிகபட்ச மொத்த விலையாக 900 ரூபாயும், அதிகபட்ச சில்லறை விலையாக 1,100ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 280 ரூபாயாகவும், சில்லறை விலை ரூ.280 முதல் ரூ.320 ஆகவும் காணப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 ரூபாயாகவும், சில்லறை விலை ரூ.420 முதல் ரூ.580 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!