வருடத்தின் முதல் நாளிலேயே உயரும் எரிவாயு விலை?
எரிவாயு விலை: புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வற் (VAT) திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி முதலாம் திகதியே உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5% வரி நீக்கப்பட்டு 15.5% வீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
அதன்படி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் 500 அதிகரிக்கப்பட்டு 4065 ரூபாய்க்கு விற்கப்படும் என கூறப்படுகின்றது.
எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவுகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.