இளைஞர்களே ஜாக்கிரதை... ஆண்களால் ஆணுக்கு ஏற்பட்ட நிலை... டேட்டிங் செயலியால் வந்த வினை!
தன்பாலின சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் இளைஞனை ஏமாற்றி, கொள்ளையடித்த ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை, ஜூலை 9 (நியூஸ்21) தன்பாலின சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் இளைஞனை ஏமாற்றி, கொள்ளையடித்த ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
'டேட்டிங்' செயலி மூலம் சிக்கிய இளைஞனை பாணந்துறை கடற்கரைக்கு வரவழைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி 9,000 ரூபாய் பணம், மடிக்கணினி மற்றும் அலைபேசி ஆகியவற்றை சந்தேக நபர்கள் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பாணந்துறை, பெல்லன்வில, ஹிரான, மொரோந்துடுவ மற்றும் வலானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட இளைஞனை பாணந்துறை கடற்கரைக்கு அழைத்து, அவரது ஆடைகளை அவிழ்த்து, வீடியோவாக பதிவு செய்துள்ளதுடன், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.