2024 டிசெம்பரில் கடனட்டை பயன்பாடு அதிகரிப்பு
கடன் அட்டை நிலுவைத் தொகையும் உயர்ந்து, 2024 டிசம்பரில் 157,957 மில்லியன் ரூபாயாக காணப்பட்டது

இலங்கையில் கடந்த நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130ஐ எட்டியதன் மூலம், 2024 டிசெம்பரில் கடனட்டை பயன்பாடு அதிகரித்தது.
மத்திய வங்கியின் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டிசெம்பர் 2023 இல் 1,917,085 கடன் அட்டைகள் காணப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.
அத்துடன், கடன் அட்டை நிலுவைத் தொகையும் உயர்ந்து, 2024 டிசம்பரில் 157,957 மில்லியன் ரூபாயாக காணப்பட்டதுடன், நவம்பரில் 151,614 மில்லியன் ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.