கடவுச்சீட்டு பெற இன்று முதல் புதிய முறை; முன்பதிவு கட்டாயம்
இந்த புதிய முறை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இணையவழியில் முன் பதிவு செய்வது அவசியமானது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
இணையவழி பதிவு முறையின் மூலம் முதலில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்காமல் திணைக்களத்துக்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற முடியாது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.