மனைவியுடன் தகாத உறவைக் கொண்டிருந்த நபரைத் தாக்கி கொலை செய்த கணவன்

பெண்ணின் கணவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஜுலை 30, 2025 - 18:05
மனைவியுடன் தகாத உறவைக் கொண்டிருந்த நபரைத் தாக்கி கொலை செய்த கணவன்

நபர் ஒருவர் தனது மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைக் கொண்டிருந்த ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தத சம்பவம் தெஹியோவிட்ட, கஹனவிட்ட பகுதியில் பதிவாகி உள்ளது.
 
ஏழு நாட்களுக்கு முன்னர் தெஹியோவிட்ட, கஹனவிட்ட பகுதியில், உயிரிழந்தவர் குறித்த பெண்ணுடனும் அவரது விசேட தேவையுடைய குழந்தையுடனும் வாடகை வீடொன்றில் குடியேறியுள்ளனர். 

இந்த நிலையில், பெண்ணின் கணவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
இதன்போது, பெண்ணின் கணவர், மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைக் கொண்டிருந்த நபரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
 
தாக்குதலுக்குள்ளான நபர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த நிலையில், சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!