பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது 5 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட உட்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் சுமார் 30% வரை குறைய வாய்ப்புள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிங்சிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது 5 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
வாகனங்களின் இரண்டாவது தொகுதியாக கடந்த 27ஆம் திகதி 196 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வருகையுடன், இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் கணிசமான அளவு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.