கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெற்றிப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்ததுடன், 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.