கடலில் வீழ்ந்த இந்திய செய்மதியின் பாகங்கள்

கிழக்கில் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Feb 10, 2023 - 15:44
கடலில் வீழ்ந்த இந்திய செய்மதியின் பாகங்கள்

இந்திய செய்மதியின் பகுதிகள் உடைந்து திருகோணமலை கடலில் விழுந்துள்ளது.

கிழக்கில் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்திய விண்வெளி கண்காணிப்பு அமைப்பு இன்று போலா என்ற செய்மதியை விண்ணில் செலுத்தியுள்ளது.

அதன் உடைந்த பகுதிகள் இலங்கையின் கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.

இப்படி உடைத்த பகுதிகள் திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள கடல் பகுதிக்குள் விழுந்துள்ளன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்