அமெரிக்க ஜனாதிபதி இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை; இரகசிய ஆவணங்கள் சிக்கின!
துணை ஜனாதிபதியாக பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த இரகசிய ஆவணங்கள் அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேலும் 6 இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பான இடங்களில் இதற்குமுன் 3 முறை சோதனை நடைபெற்றபோது 10க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
துணை ஜனாதிபதியாக பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த இரகசிய ஆவணங்கள் அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, டெலவேர் மாநிலத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 1973 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை, செனட் சபை உறுப்பினராக அவர் பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த 6 இரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.