புதிய வகை மதுபானம் தொடர்பில் மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!
சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான பாவனையை தடுக்க புதிய மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் சந்தையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளதுடன், மதுவரித் திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தடுக்கும் வகையிலும் பொதுமக்களை சட்டவிரோத மதுபான பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலையில் மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்களத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.